23 Dec 2015

பகவான் ஸ்ரீ ரமண மகரிசியின் 136 ஆவது ஆண்டு ஜெயந்தி விழா

SHARE
பகவான் ஸ்ரீ ரமண மகரிசியின் 136 ஆவது ஆண்டு ஜெயந்தி விழா எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முன்னாள் இளைஞர் சேவை உதவிப் பணிப்பாளர் த.ஈஸ்வரராஜா தலைமையில் ஏறாவூர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாச்சிரமத்தில் நிரந்தர அனுக்கிரக விலாசத்துடன் விளங்கும் ஸ்ரீ பகவத் சந்நிதியில் மன்மத வருடம் மார்கழி 11ஆம் திகதி 27.12.2015 ஞர்யிற்றுக்கிழமை ரமண மகரிசியின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

இலங்கைக் கிளையினரால் மட்டக்களப்பு ஏறாவூர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் பகவான் ராமண மகரிசியின் 136 ஆவது இவ்விழா நடத்தப்படுகிறது. இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இலங்கைக் கிளையின் தலைவர் மா.செல்லத்துரை அழைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.சிறிநேசன் கலந்து கொள்ளவுள்ளார்.
மட்டக்களப்பு ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில், கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி, நரீர்ப்பாசனம், கூட்டுறவு அபிவிருத்தி மற்று உணவு விநியோகத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சுpறப்பு விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி க.இராஜேந்திரம், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கி,குணநாயகம், ஏறாவூர் ஸ்ரீ கணேச காளிகா ஆலய பரிபாலன சபைத் தலைவர் பொ.கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: