16 Nov 2015

கிழக்கு சீன மண்சரிவில் 25 பேர் பலி

SHARE
கிழக்கு சீனாவில் இடம்பெற்ற மண்சரிவினால் 25 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காணாமல் போயுள்ளனர். 
இந்த மண்சரிவு வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 30 ற்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ் வீடுகள் மண் மேடுகளிலும் பாறைகளிலும் அமைக்கப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் இக் கிராமத்தில் இவ்வாறான பிரச்சினை ஏற்படுவது வழக்கம். அதிலும் ஒருவர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டுள்ளார் என மீட்பு நடவடிக்கை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மீட்புப்பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: