16 Nov 2015

திருமலையில் வெள்ளத்தினால் 2,395 குடும்பங்கள் பாதிப்பு

SHARE
திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக இதுவரை 2,395 குடும்பங்களைச் சேர்ந்த 9046 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  தற்போது சீரான காலநிலை நிலவுவதன் காரணமாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.
தற்போது 16 குடும்பங்கள் மாத்திரம் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் இருப்பினும் சகல பிரதேச செயலகப்பிரிவுளிலும் வெள்ளம் தொடர்பில் முன் ஆயத்தநிலை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: