மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நவராத்திரிவிழா மற்றும் பூஜை நிகழ்வுகள் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர கே.கிரிதரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது விஷேட பூஜை வழிபாடுகளை மாவட்ட செயலக பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வரக்குருக்கள் நடாத்திவைத்தார்.
ஆன்மீக உரையை மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தாஜி மகராஜ் நிகழ்த்தினார்.
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment