3 Oct 2015

கட்டுரை: சர்வ தேச ஆசிரியர் தினம்

SHARE

(இலெட்சுமணன் சுதாகரன்) 

எந்தப் பணிக்கும் கிடைக்காத பெருமையும் பாராட்டும் ஆசிரியர் பணிக்குண்டு. முழு நிறைவான சமூகக் கட்டமைப்பினைக் கொண்ட மகத்தான பணி செய்பவர்கள் ஆசிரியர்களே;
ஆசிரியர் என்ற பதமானது குற்றங்களைக் போக்குபவர் எனும் கருத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது..மாதா பிதா குரு தெய்வம் என்ற பதங்களை வெளிப்படையாக நோக்குகின்ற போது தமது பெற்றோருக்கு அடுத்த படியாகவும் தெய்வத்திற்கு முதன்மையாகவும் வைத்து போற்றுகின்ற தன்மை ஆசிரியர்களுக்கே உரியது.ஆசிரியர் சேவையினை வெறுமனே வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது அத்தகைய சிறப்பு மிக்க மனிதநேயப் பண்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி சர்வ தேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இவ்வாறான தினத்தில் ஆசிரியர்கள் மாணவர்களினால் கௌரவிக்கப்படுகின்றனர்.இதன் மூலமாக ஆசிரியர் மாணவர் இடைத் தொடர்புகள் நெருக்கமடைய வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுகிறது.குடும்பங்களிலிருந்து தனது கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகளில் இணைகின்ற ஒவ்வொரு பிள்ளைக்கும் பாடசாலை நிருவாகம் பெற்றோராக மாத்திரமல்லாது நெறியாளர்களாகவும் ஒவ்வொரு நாளும் ஆறு மணித்தியாலங்கள் அறிவுப் பசியினை போக்குகின்ற பெற்றோராக பாத்திரமேற்கின்றனர்.இதன் மூலமாக பிள்ளை பெற்றோருக்கு மேலாக ஆசிரியர்களை மதிக்கின்றனர்.தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றுகின்ற மாணவனாக ஆக்குவதோடு நல்ல மனிதனாக மாற்றுகின்ற பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு அதே போல் ஆசிரியர் என்பவர் மாணவ சமூகத்தினை உருவாக்குபவர் அல்ல மாறாக உயிரூட்டுபவர் ஒரு சிறந்த ஆசிரியரின் பண்பாகும்.

வெறுமனே பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கு தினமும் கற்றலுடன் ஒழுக்க நெறிகளை புகட்டி அறிவு ஞானத்தினை திறந்து அவர்களை சாதனையாளர்களாக மாற்றுவது ஆசிரியர்களே; புனிதத்துவம் வாய்ந்த ஆசிரியர் பணியானது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஒரு ஆசிரியர் தான் முதுமை அடைந்து இறந்தாலும் அவர் தனது மாணவர்களுக்கு புகட்டிய கல்விச் செல்வம் என்றுமே அழிவதில்லைஇ தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களுக்கு சமூகக் கட்டமைப்பினை ஆசிரியர்தான் கற்றுக் கொடுக்கின்றார்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதத்திற்கு சமன் இது போலதான் தனது மாணவ சமூகம் குறிக்கோள் இலக்கு இல்லாமல் இருந்தால் எதிர் காலம் ஓர் இருண்ட காலமாக அமையும் என்பதனை ஆரம்ப காலத்திலிருந்தே மாணவர்களின் மனதில் பதிய வைத்து அதன் மூலமாக கிடைக்கின்ற வெற்றி மூலம் ஆசிரியரின் உள்ளம் மட்டற்ற மனமகிழ்ச்சியடைவதனை அவரின் முகத்தின் அழகு மூலமாக அறிந்த கொள்ள முடியும்.

நல்ல ஆசான் ஒருவரின் பண்புகளை மாணவர்கள் பின்பற்றுவார்கள் அதன் மூலமாக எதிர்  காலத்தில் தான் சார்ந்த சமூகத்தினை வழிநடத்துகின்ற அனைத்துப் பொறுப்புக்களுக்கும் பங்காளியாக நல்லாசானின் வழித் தோன்றலில் உருவான மாணவர்களின் செயற்பாடுகள் துணை புரிகின்றன.நமக்காக தம்மை அர்பணித்த இவர்கள் எமது உளநன்றிக்கும் செயலளவு மரியாதைக்கும் உரித்துடையவர்கள்.

ஒருதேசத்தின் வளமான எதிர்காலத்தை தாங்கவிருக்கும் தூண்களுக்கு பலமூட்டுகின்ற பாக்கியம் ஆசிரியர்களுக்கு உண்டு இமனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மனித சமூகத்தின் முதுகெழும்பாக விளங்குகின்ற ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் முகமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழமை இவ்வாறான செயற்பாடுகள் மனித நாகரிகத்தின் பண்பாட்டினை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஒக்டோபர் 05ம் திகதி உலக ஆசிரியர் தினம் உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்பட்டுவருகின்றன யுனெஸ்கோ நிறுவனம் ஆசிரியரின் முக்கியத்தை உணர்த்தும் நோக்கில் ஆசிரியரின் மகத்தான தன்மையினைக் கருத்திற் கொண்டு அவர்களால் ஆற்றப்படும் சேவைக்கு மதிப்பளிக்கும் முகமாக இவ் உலக ஆசிரியர் தினத்தினை பிரகடனப்படுத்தியுள்ளது.பொதுவாக ஆசிரியர்களை தெய்வமாக மதிக்கின்ற தன்மை உலக நாடுகளில் காணப்படுகின்றது.

இலங்கையில் ஆசிரியர் தினத்தன்று சிங்கள மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு வெற்றிலை கொடுத்து காலில் விழுந்து மாணவர்கள் வணக்கம் செலுத்தம் நடைமுறை காணப்படுகின்றன.இவ்வாறான தினங்கள் கொண்டாடப்படுவதன் மூலமாக ஆசான்களின் உள்ளம் மகிழ்ச்சி அடைகின்றது.எனவே ஆசிரியர் தினமானது ஒவ்வொரு வருடமும் கொண்டாட்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: