மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்டப்பட குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்திற்குள் வெள்ளிக்கிழமை இரவு (23) புகுந்த இனந்தெரியாத நபர்கள் ஆலய விக்கிரகங்கள், மற்றும் சிலைகளை உடைத்துவிட்டுச் சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
ஆலயத்தின் நவக்கிரகத்தில் வைக்கப் படப்டிருந்த விக்கிரகங்கள், மற்றும் சிலைகள் அடங்கலான 13 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
வழக்கம்போல் அதிகாலை 4.30 மணிக்கு ஆலயத்திற்குச் சென்ற ஆலய பரிபாலனசபைச் செயலாளர் ஆலய விக்கிரகங்கள், உடைக்கப்பட்டு கீழே கிடப்பதை அவதானித்துள்ளார். இதன்பின்னரே ஆலயம் உடைக்கப்பட்டுள்ளது என்ற விடையம் தெரிவந்துள்ளதாக குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்மபவம் அறிந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைகப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாணசபை உறுப்;பினர்கள், அனைவரும் இஸ்தலத்திற்கு சனிக்கிழமை (24) காலை விஜயம் செய்து நிலமையினை நேரில் அவதானிகத்துள்ளனர்.
இவ்வாலய உடைப்பு சதம்மந்தமாக தீவிர விசாரணைகள களுவாஞ்சிகுடி பொலிசார் முன்நெடுத்துள்ளனர்.










0 Comments:
Post a Comment