கடந்த 17ஆம் திகதி இலங்கையில் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த கணிஷ்டப் பிரிவு மற்றும் சிரேஷ்டப் பிரிவு மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கணித வினா விடைப் போட்டியில் கிழக்கு மாகாணம் கணிஷ்டப் பிரிவிலும் சிரேஷ்டப் பிரிவிலும் முதலிடம் பெற்றுள்ளது.
குறிப்பிட்ட மாணவர்களின் வெற்றி தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் திங்கட் கிழமை (21) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தனது வாழ்த்தில் குறிப்பிடுகையில்:
கிழக்கு மாகாணம் கல்வியில் முன்னோக்கிச் செல்கிறது. பல சவால்களை எதிர்கொண்டு கிழக்கின் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அனைத்து வலையக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பாக திறமைகளைக் காட்டி முன்னிலையில் திகழும் மாணவச் செல்வங்களுக்கும் எனது மனப்பூர்வமான இறுக்கமான அன்புடனான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிழக்கிலிருந்து சென்று இன்று இலங்கையின் சகல பாகங்களிலும் ஆசிரியர்கள் தங்களின் திறமைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கல்வியில் கிழக்கு மாகாணம் இன்னும் பல வெற்றிகளைப் பெறவேண்டும்.
இன்று கல்வியில் மாற்றம் நிகழ்திருக்கிறது நிகழ விருக்கிறது. எனவே புதிய கல்வியில் மேலோங்கி நாமும் வாழ நம்மைச்சூழவுள்ள அனைவரும் வாழ நம்மூரும் நம் மாவட்டமும் மாகாணமும் முன்னிலையில் திகழ அனைவரும் உங்களை நீங்கள் தயார் நிலையில் ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும்.
கிழக்கில் கல்வி நடவடிக்கைகளுக்கு எந்தவிதப் பாதிப்புமின்றி சகல மூலை முடுக்குகளிலும் இருக்கும் பாடசாலைகளுக்கும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் இதர தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்க கல்வி அமைச்சு ஆயத்தமாக இருக்கிறது.
எனவே கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோர் இணைந்து ஒருமைப்பாட்டுடன் கல்விக்கு உதவி கல்வி நடவடிக்களைகளைச் சரியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தனது வாழ்த்தினைக் கூறிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக தண்டாயுதபாணி கடமையைப் பொறுப்பேற்றதன் பின்னர் கல்வி வளர்ச்சி முன்னேறிச்செல்வதால் அமைச்சர் தண்டாயுதபாணிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
0 Comments:
Post a Comment