அழகான இலங்கைகைக் கட்டியெழுப்புவோம் எனும் தொணிப்பொருளில் இன்று செவ்வாய்க் கிழமை (22) மட்டக்களப்பு மாவட்டத்தின், களுவாஞ்சிகுடிப் பிரதேச்தில் கடற்கரை அண்டிய கரையோரப் பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், பிரதேச சபை, களுவாஞ்சிகுடி பொலிசார், மற்றும். பாடசாலை மாணவர்களும், இணைந்து இந்நடவடிக்கைகளை முன்நெடுத்திருந்தனர்.
இதன்போது, செட்டிபாளையம், களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கல்லாறு, ஆகிய பிரதேசங்களை அண்டி கடற்கரைப்பகுதிகள் சுமார் 1000 நபர்களைக் ககொண்டு, சுத்தம் செய்யபட்படதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலநிதி எம்.கோபாலரெத்தினம், தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment