திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் சேதமடைந்து காணப்படும் கீராண்டகுளத்தை புனரமைத்து தருமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் கவனிப்பாரற்றுள்ள இக்குளத்தின் மதகு, வான்கதவுகள், குளக்கட்டு ஆகியன சேதமடைந்துள்ளதாக கஜமுகன் விவசாய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சரவணமுத்து முதல்வன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். சுமார் 650 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தேவையான நீரை இக்குளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
இக்குளத்து நீரை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத்தை நம்பி சுமார் 700 குடும்பங்கள் நேரடியாகவும் இன்னும் பல குடும்பங்கள் மறைமுகமாகவும் நன்மையடைகின்றன. இக்குளத்தை புனரமைப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியுள்ளதுடன்,
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்;கத்துக்கு தமது விவசாய சம்மேளனம் எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இக்குளத்தின் புனரமைப்பு தொடர்பில் தோப்பூர் பெரும்போகப் பிரிவின் கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.எம்.ஹனீபாவிடம் நேற்று வியாழக்கிழமை கேட்டபோது, 'கீராண்டகுளமும் அக்குளத்தை ஒட்டியதாகவுள்ள மரவட்டைக்குளமும் முழுமையாக புனரமைக்க வேண்டியுள்ளது. இவ்விரு குளங்களும் மத்திய அரசின் சிறு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வருகிறது' எனவும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment