மட்டக்களப்பு களுவாஞ்சிககுடியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள்,தலைவருமாகிய காலம் சென்ற சி.மு.இராசமாணிக்கத்தின், நினைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “இராசமானிக்கம் மக்கள் அமைப்பு” எனும் மக்கள் தொண்டு நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (13) களுவாஞ்சிகுடியில் இடம் பெற்றது.
களுவாஞ்சிகுடி கிராமத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அண்முனை தென் எருவில் பற்று, பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், முன்னாள் அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் உட்பட பொதுமக்கள் பலரும், கலந்து கொண்டிருந்தனர.
இதன்போது, களுவாஞ்சிகுடி சந்தயில் அமைந்துள்ள, சி.மு.இரசமாணிக்கத்தின் உருவச்சிலைக்கு அவரது புதல்வாரன இ.இராஜபுத்திரனால், மலர்மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் மக்கள் அமைப்பின் பெயர் பலகையினை அவரின் புதல்வியான திருமதி ரதினி அல்பட் சீவரெத்தினம் திரை நீக்கம் செய்து வைத்தார.; இதனைத் தொடர்ந்து இராசமாணிக்கம் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந்த அமைப்பினைக் மேற்கொண்டு நடாத்துவதற்காக ஐம்பது மில்லியன் ரூபாய் நிதியினை சி.மு.இராசமாணிக்கத்தின் பிள்ளைகளினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் கணவனை இழந்த விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டில் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உதவிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதனூடகா இப்பிரதேச மக்களின் பங்களிப்பினைப் பெற்று நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய வகையில் வருமானத்தினை பெறும் நோக்கில் தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளதாகவும், இதற்காகவே நாங்கள் இதற்காக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு என பெயரிட்டுள்ளோம். என அங்கு உரையாற்றிய கீர்த்திவர்மன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
இதன்போது இனறயதினம் இந்த அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட 400 பேருக்கு கோழி வளர்ப்புக்கான கோழிக்குச்சுகளை பெற்றுக் கொள்வதற்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment