ஆலயங்களின் மூலம் மக்களிடையே ஆண்மீக சிந்தனை வளர்க்கப்பட்டு இந்த உலகத்தில் வல்லவர்களாகவும், நல்லவர்களாகவும், சமூகம் போற்றுகின்றவர்களாகவும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்த்தானத்தில் வருடாந்த பெருவிழா நடைபெற்றபோது இந் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக நேற்று இரவு இவ்வாலயத்திற்காக பல வழிகழிலும் சேவைகள் செய்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசனின் சேவையை பாராட்டி ஆலய தலைவரால் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு ஆலயகுருவினால் ஆசியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர், எமது மதமான இந்துமதத்தினை எடுத்து பார்க்கும்போது உலகலாவிய ரீதியில் அனைத்து நாடுகளிலும் பரவி இருக்கின்றது என்பதனை இன்றும் அவதானிக்கமுடிகின்றது.
இலங்கை திருநாட்டினை பொறுத்தவரையில் இந்து மதத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுமுகமாக பல ஆலயங்களை நோக்கி நாயன்மார்கள் பாடல்களை பாடி இந்து மதத்தின் தொன்மையை எடுத்துக்காட்டியிருக்கின்றார்கள்.
எவ்வாறுதான் தொன்மைகள் வெளிக்காட்டப்பட்டிருந்தாலும்கூட இன்றைய காலகட்டத்தினை பொறுத்தவரையில் எங்களுடைய இந்து ஆலயங்கள் எமது மக்களை நெறிப்படுத்தி செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது.
இன்று உலகலாவிய ரீதியில் நவினத்துவமான கலாசாரங்கள் உருவாகிக்கொண்டு வருவதனால் இந்து மக்களுடைய வாழ்க்கையிலும் அவர்களது கலாசாரங்கள் அருகிப்போய்க்கொண்டிருக்கும் நிலையினையும் அவதானிக்கமுடிகின்றது.
இவ்வாரான தவறுகளை ஆலய நிருவாகிகளால் மாத்திரம் தடுத்து நிறுத்த முடியாது மாறாக அனைத்து பெரியார்கள், இளைஞர்கள், மற்றும் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து எமது எதிர்கால சமூகத்தினரது நேரிய பாதையில் மிகவும் கரிசைனையாக இருந்து செயற்படவேண்டும்.
இந்த நாட்டைப்பொறுத்தவரையில் எமது இனம், மதம் பல்வேறுபட்ட இடர்பாடுகளை சந்தித்து வந்திருக்கின்றது அதே நிலையில்த்தான் இன்றும் நாங்கள் தமிழர்களாக, இந்துவாக இருந்து வருகின்றோம் என்பதும் பெருமையான விடயம். எனவே ஆலயங்கள் எமது மக்களை நல்வழிப்படுத்துவதுடன் எமது இனத்தின் இருப்புக்களையும் தக்கவைத்துக்கொள்வதில் அனைவரும் முன்னின்று உழைக்க முன்வரவேண்டும் எனவும் இந்த ஆலயத்திற்கு எதிர்காலத்தில் மேலும் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பின்னிற்க மாட்டேன் எனவும் கூறினார்.
0 Comments:
Post a Comment