மட்டக்களப்பு மாவட்டத்தில் பின் தங்கிய தமிழ்,முஸ்லிம் கிராம பாடசாலைகளில் மிக நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் வசதிக்கான தேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் யுத்தம் மற்றும் இயற்கை அணர்தங்களினால் பாதிக்கப்பட்டு அபிவிருத்தியடைந்து வரும் பின் தங்கியுள்ள கிராம பாடசாலைகளில் மாணவர்கள் சுத்தமான நீரினை அருந்துவதற்கான வசதிகள் மிக நீண்ட காலமாக நிவர்த்தி செய்யப்படாமல் இருந்து வந்தது.
“சகலருக்கும் கல்வி” எனும் அபிவிருத்தி திட்டத்திற்கமைவாக தேர்வு செய்யப்பட்ட ஏழு கிராம பாடசாலைகளிலும் 4.9 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நீர் தாங்கி கட்டிடம் நிர்மானிக்ப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
வலயக்கல்வி அலுவலகங்களுடன் இணைந்து இலங்கை நாட்டுக்கான முஸ்லிம் எயிட் கள நிறுவனம் இதனை நிர்மானித்துள்ளது.
இதன் திறப்பு விழா நிகழ்வு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.அபுல்ஹஸன் தலைமையில் நேற்று இடம் பெற்றது.
இவ்வைபவத்தின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, ஓட்டமாவடி கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.எல்.மீராசாஹிப், முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் ரீ.சலீம் சிரோஷ்ட செயற்றிட்ட அதிகாரி எம்.எம்.எம்.முனீர், மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி,கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.எம்.ஜெமிலூன் நிஸா, பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம்.அன்வர், முன்னாள் தவிசாளா் கே.பீ.எஸ்ஹமீட் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளிட பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment