பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில்
சிறுவர் ஒருவரும் அடங்குவதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான எஸ்.மஹிந்த பால (வயது 48) கல்கடவெல-கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்தவரும் என்.பைரூஸ் கான் (வயது 27) 01ம் வட்டாரம் -நிலாவெளி பகுதியைச் சேர்ந்தவரும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 11 சிறுவனும் -மூதூர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த சரோஜா (வயது 39) என்பவரே பாம்பு கடிக்கு இலக்காகியவர்கள் எனவும் தெரியவருகின்றது.
வயல் காலங்களில் அதிகளவில் பாம்பு கடிக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments:
Post a Comment