(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டம், பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவிலும் தற்போது அதிக வரட்சி நிலவி வருகின்றது, இந்நிலையில், இப்பிரதேசத்தில், 20 கிராமங்களை உள்ளடக்கியதாக, தற்போது வவுசர்கள் மூலம், குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்பிரதேசத்தில், வரட்சியினால் பாதிக்கப்பட்ட 1542 குடும்பங்களைச் சேர்ந்த 4985 பொது மக்களுக்கு நாளாந்தம் 9000 லீற்றர் குடிநீர் வழங்கப்படுவதாகவும், பட்டிப்பளைப் பிரதேச செயலாளர், திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் வரட்சியின் நிலமை அதிகம் காணப்படுவதனால், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு வருவதுடன்,பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு, அனுப்பி வைத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய மேலதிக நடவடிக்கையை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொள்ளத், திட்டமிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment