22 Aug 2015

பெண்கள் இருவரை காணவில்லை

SHARE

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பையடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (21) காலை 10.00 மணிமுதல் இரு பெண்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஏ.எம்.நஜிப், சனிக்கிழமை (22) தெரிவித்தார்.
சவளக்கடை வேப்பையடிப் பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தக்குமார் கிசாலினி (வயது 14), மண்டூரைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை கிசானி (வயது 17) என்ற இரு யுவதிகளே காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
குறித்த பெண்களின் பெற்றோர், வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும் இவர்கள் இருவரும் அம்மம்மாவின் பராமரிப்பில் இருந்ததாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து துரித விசாரணை மேற்கொண்டுள்ளதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஏ.எம். நஜிப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: