கடந்த 30 வருட காலமாக எதுவித அபிவிருத்திகளையும் கண்டிராத நிலையில் மிகக் குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு இப்பிரதேச மக்களுக்குச் சேவைகளைச் செய்து கொண்டு வந்ததுதான் இந்த களுவாஞ்சிகுடி ஆதரா வைத்தியாசலையாகும்.
என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் 99வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திங்கட் கிழமை (10) மேற்படி வைத்தியாசலையில் பல்வேறு வைத்திய சேவைகளை விஸ்த்தரித்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
தற்போது கடந்த சில வருடங்களாக ஜப்பானின் ஜெய்க்காத் திட்டத்தின் கீழ் 300 இற்கு மேற்பட்ட மில்லியன் ரூபாய் நிதிகளைக் கொண்டு, பலஅபிவிருதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இன்று எமது வைத்தயிசாலையின் 99 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வைத்தியசாலை தினம் எனும் தொணிப் பொருளின் கீழ், இதுவரையில் இவ்வைத்தியசாலையில் இல்லாமலிருந்த பல சேவைகளை இன்று விஸ்த்தரித்துள்ளோம். அந்த வகையில்.
சத்திர சிகிச்சைக்கூடம் அங்குரார்ப்பணம், சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் சேவை நிலையம் ஒன்று ஆரம்பிக்கப் படடுள்ளது., தொற்றா நோய்களுக்குரிய கிளினிக் நிலையம் ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது, இதில் 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முழு உடற் பரிசோதனைகளை இங்கு மேற்கொள்ளலாம். அத்தோடு சத்திர சிகிச்சைக் கிளினிக் நிலையம், மற்றும் வைத்தியசலைக்குரிய பெயர்பலகை போன்றவற்றையும் இன்று திறந்து வைத்துள்ளோம்.
எமது வைத்தியசாலையின் சேவைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு செல்கின்றது.
இதுவரை காலமும், இப்பிரதேச மக்கள் மட்டக்களப்பு, மற்றும், கல்முனை போன்ற வைத்தியசாலைகளில்தான் மேரிதிக சிகிச்சைகளைப் பெற்று வந்தார்கள், இன்றிலிருந்து களுவாஞ்சிகுடியிலும் பல சிகிச்சைகளையும், சேவைகளளையும் மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் சில இன்னும், சில காலங்களில் வைத்தியாசலையில் சேவைகள் விஸ்த்தரிக்கப்படும் இதற்கு நிருவாக ரீதியாகவும், மக்களிடமிருந்தும், அரசியல் ரீதியாகவும் இணைந்து பல ஒத்துழைப்புக்கள் கிடைத்து வருகின்றமை எமக்கு உத்வேகத்தைத் தருகின்றது. என வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment