கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை சுனாமி வீட்டுத் திட்டத்தை சேர்ந்த, அப்துல் ஹமீத் முஹம்மத் இப்றாஹிம் (வயது 65) என்பவர் குட்டை ஒன்றிலிருந்து இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வயோதிபரை நேற்று இரவு முதல் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.
இந்நிலையில், மருதமுனை ஷம்ஸ் பாடசாலை மைதானத்துக்கு அருகிலுள்ள குட்டை ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment