நாளை (04) ஆரம்பமாகவுளள் க. பொ. த. உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் பொலிஸாரின் வசதி கருதியே தபால் மூல வாக்களிப்பு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்ததுள்ளது.
இதற்கமைய படி பொலிஸ் நிலையங்களிலும் வலய அல்லது கோட்டக் கல்வி அலுவலகங்களிலும் தேசிய பாடசாலைகளிலும் இன்று தபால்மூல வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
தபால் மூல வாக்காளர்களின் அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டை எவரும் பார்க்க முடியாத வகையில் சுதந்திரமாகவும் இரகசியமாகவும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் வாக்காளர்கள் தமக்குரிய வாக்களிப்பு நிலையத்திற்கு அலுவலக நேரத்திற்குள் சென்று அச்சமின்றி வாக்களிக்கலாமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
உத்தியோகப்பூர்வ தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடத்தப்படும் இதேவேளை தேர்தல்கள் திணைக்கள அலுவலர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு 08 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்கு 5 இலட்சத்து 66 ஆயிரத்து 823 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள அதேவேளை 62 ஆயிரத்து 102 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment