2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை எங்கே நடத்துவது என்பது தொடர்பாக மலேசிய தலைநகர் கோலாலம்ப+ரில் நேற்று (31) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அந்த அதிர்ஸ்டம் சீன தலைநகர் பீஜிங்குக்கு கிடைத்துள்ளது.
ரஸ்யாவின் சோச்சி நகரில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அம் மாதம் 23 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. சுமார் 50 பில்லியன் யுரோக்கள் செலவில் வெகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற்றன.
2900 வீரர் வீராங்கனைகள் இந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் விளையாடவுள்ளனர். இந்த போட்டியை நடத்திய ரஸ்யா அதிக பதக்கங்களை வென்று பட்டியலில் முதலிடம் பெற்றது. 13 தங்கம் 11 வெள்ளி 9 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களை ரஸ்யா வென்றது. மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அமெரிக்க விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பெரிதாக சோபிக்க முடியாமல் நோர்வே மற்றும் கனடாவுக்கு அடுத்த மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.இந்நிலையில் தென்கொரியாவில் 2018 ஆம் ஆண்டு இந்த போடடி நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை எங்கே நடத்துவது என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஆலோசனை நடத்தி வந்தது. இதற்காக கஜகஸ்தான் நாட்டில் உள்ள நகரம் உள்ளிட்ட சில முக்கிய நகரங்கள் பரீசீலிக்கப்பட்டன.
இது தொடர்பில் மலேசிய தலைநகரில் நேற்று சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பிரதிநிதிகள் இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருந்தனர். இதில் அல்மாட்டி நகரை பின்தள்ளி 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை சீன தலைநகர் பீஜிங் நகரம் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment