நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 05 பேர் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், மட்டக்களப்பு மாவட்டத்தில் அலிசாஹிர் மௌலானா, அம்பாறை மாவட்டத்தில் ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தயாகமகே, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எம்.ஜ.மன்சூர், சிறீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிரதி நிதித்துவப்படுத்திய கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு அக் கட்சிகளின் சார்பில் அடுத்தபடியாக விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்கள்.
0 Comments:
Post a Comment