ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் காரியாலயம் ஒன்று சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க. வேட்பாளருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மு.கா. செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதில் வேட்பாளர்களான பைசால் காசிம், எம்.ஐ.எம்.மன்சூர், மு.கா. சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை பிரதி மேயருமான அப்துல் மஜீத் உட்பட மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.
0 Comments:
Post a Comment