23 Jul 2015

“கிழக்கில் வழங்க இருக்கும் வேலைவாய்ப்பிற்கு பூரண ஆதரவு வழங்குவேன்” இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

SHARE
கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்த இலங்கை மற்றும் மலேசியாவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேமஸ் டொரிஸ் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை இன்று புதன்கிழமை (22) சந்தித்தார்.







காலை 9 மணிக்கு இடம்பெற்ற இச்சந்திப்பின் போது கிழக்கின் அபிவிருத்தி சம்மந்தமாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார். அதன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த உயர்ஸ்தானிகர். பிரித்தனியா இலங்கையின் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு முழு ஆதரவு வழங்கும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்ட விடையங்களை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்க ஏற்பாடு செய்வேன் என்றும் தெரிவித்தார் .
மேலும் அவர் குறிப்பிடுகையில்: கிழக்கில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கு பிரித்தானியாவின் உதவிகள் பூரணமாக வழங்கப்படுவதுடன், கிழக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள், விதவைகளுக்கான சுயதொழில் மற்றும் வாழ்வாதார உதவிகள், கிழக்கில் தொழிற்பேட்டைகள் அமைத்தல் போன்றவற்றுக்கு எங்களுடைய நாடு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய விடுத்துள்ள கிழக்கில் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்னும் சவாலுக்கு நானும் என் நாடு சார்பாக பூரண ஆதரவு வழங்குவேன் என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களைச் சந்தித்த பின்னர் தனது ட்விட்டரில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கிழக்கு முதலமைச்சரின் சமூக முன்னேற்றத்திற்கான சவால்கள் நேர்த்தியாக இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உயர்ஸ்தானிகருக்கு கிழக்கு மாகாணம் சார்பாக நினைவுச்சின்னம் ஒன்றினை வழங்கிவைத்ததுடன். பிரித்தானியா சார்பாக முதலமைச்சருக்கு உயர்ஸ்தானிகர் நூல் ஒன்றினை வழங்கிவைத்தார். குறிப்பிட்ட இந்நிகழ்வில் முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சமந்த அபேகுணவர்தனவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: