23 Jul 2015

மலேசியாவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்- மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் சந்திப்பு

SHARE

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இலங்கை மற்றும் மலேசியாவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேமஸ் டொரிஸ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ளஸை நேற்று (22) சந்தித்துக் கலந்துரையாடினார்.
மாவட்ட செயலாளரது அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலை, கடந்தகால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், தற்போதைய தேவைகள், மக்களின் வாழ்வாதாரங்கள், கல்வி, தொழில் வாய்ப்புகள், இளைஞர்களது பிரச்சினைகள் எனப் பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாகவும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச்செயற்பாடுகள் குறித்தும் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேமஸ் டொரிஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டதுடன், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் அதிகாரி அஸ்மா ரஹ்மானும் இணைந்திருந்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: