வரலாற்று பிரசித்திபெற்ற உகந்தமலை ஶ்ரீ முருகனாலயத்தினூடாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்படும்.
காட்டுப்பாதையானது இம்மாதம் 08 ஆம் திகதியான இன்று திறக்கப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் மூடப்படும். இப்பாதையானது காலை 05.30 மணி முதல் மாலை 04 மணிவரை திறந்திருக்கும். இதற்கான தீர்மானம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி வணிகசிங்க தலைமையில் அண்மையில் எடுக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment