24 Jul 2015

ஆதனவரிகளை உரிமையாளர்களின் பெயரிலையே அறவிட வேண்டும்:

SHARE

திருகோணமலை நகர சபையால் வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆதன வரிகளை காணி உரிமையாளர்களான மக்களின் பெயரிலேயே அறவிடுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் காந்தி நகர் சுலோட் ஹவுஸ் கஸ்தூரி நகர் ஆகிய கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னால் நகரசபை உறுப்பினர் கா.கோகுல்ராஜ் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றுடன் முதலமைச்சர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்தரையாடலின் போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர், நகரசபை செயலாளர் ஆகியோர் 1947 ம் ஆண்ட முதல் அக்கிராமங்களில் வாழ்ந்த வரும் மக்களுக்கு 1995 ம் ஆண்டு முன்னால் நகரசபை தலைவர் பி.சூரியமுர்த்தி காணிகள் அளவிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தது
இருப்பினும் அப் போது மின்சாரம் மற்றும் குடிநீர் அணைப்புக்களை வழங்கவே அவர்களால் வழங்கப்பட்ட ஆவணம் செல்லுபடியானதாக அமைந்திருந்தது. அதன் பின்னர் முன்னால் நகரசபை தலைவர் ச.கௌரி முகுந்தன் காலத்தில் 576 பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டு அவை காணி பதிவாளர் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்டு நகரசபை பதிவேட்டிலும் பதியப்பட்டது.
இக்காணிக்கான நகரசபையால் அறவிட வேண்டிய வரிகளை சிலரிடம் நகரசபையின் பெயரிலேயே நகரசபை அறவிட்டு வந்தனர்.
இச்சந்தர்பத்திலேயே மிக நிண்ட காலமாக இழுபரி நிலையில் இருந்து வந்த இப்பிரச்சினையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் நகர சபையால் வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆதன வரிகளை காணி உரிமையாளர்களான மக்களின் பெயரிலேயே அறவிடுமாறு திருகோணமலை நகர சபையினருக்கு உத்தரிவிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: