ஜனாதிபதி மாற்றம் வந்ததன் பின்னர் மக்கள் ஓரளவு கருத்துக்களைத் தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு வழிசமைத்துக் கொடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான். இதன் காரணமாக பலர் தற்போது வேட்பாளர்களாக முன்வந்துள்ளார்கள். இது வரவேற்கத் தக்க விடையம்
என தமிழ் தேசிக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வேட்பாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (19) களுமுந்தன்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ந.தசரதன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகங்களுக்கு கேடயங்களை வழங்கி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
தற்போது நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களெல்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இல்லையா? என்ற கேள்வியும் மக்களிடத்தில் வரலாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் 4 வது நாடாளுமன்றத் தேல்தான் தற்போது நடைபெறவிருக்கின்றது.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதலாவது தேர்தலில் போட்டியிட்டோம். பின்னர் ஒரு வருடத்திப் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளிடத்தில் வடகிழக்கில் 70 வீதமான நிரப்பரப்பு இருக்கும் காலகட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 உறுப்பிளர்களைப் பெற்றது.
இதன் பின்னர் மஹிந்த அரசின் கூலிப்படைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இலக்கு வைத்து பல தாக்குதல்களை நடாத்தினர். அவ்வாறான தாக்குதல்களில் யோசப்.பரராசசிங்கம், ரவிராஜ், கிட்ணன் சிவனேசன், சந்திரநேரு, ஆகியோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அப்போதைய காலகட்டத்தில் நாங்கள் உயிரைப் பணயம் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகவிருந்து செயற்பட்டோம். அக்காலப் பகுதியில் 2004 ஆம் ஆண்டு மாவிலையாற்றில் போர் தொடங்கப்பட்டு மட்டக்களப்பு, வாகரை ஊடகாச் சென்று, படுவான்கரையை ஊடறுத்து மன்னாருக்குச் சென்று பின்னர் முள்ளி வாய்க்காலில் 2009 மே 19 இல் அந்த போர் முடிவுற்றது.
இதன் பின்னர் விடுதலைப்பு புலிகள் இல்லாத காலகட்டமான 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கபட்டு அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எமது கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு பலர் முன்வரவில்லை. அந்த இக்கட்டான காலகட்டத்தில் நாங்கள் பலரை அழைத்திருந்தோம். எவரும் தேர்தல் பிரச்சாரங்களுக்குக் கூட வரவில்லை. அப்போதைய காலகட்டத்தில் எம்மோடு வந்து கதைப்பவர்கள் புலனாய்வாளர்களால் விசாரிக்கப் பட்டார்கள். எம்மை புலனாய்வுப்பிரிவு நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தது.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி வரைக்கும் முனாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எம்மை நோரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்திக் கொண்டுதான் இருந்தர்.
ஜனாதிபதி மாற்றம் வந்ததன் பின்னர் மக்கள் ஓரளவு கருத்துக்களைத் தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு வழிசமைத்துக் கொடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான். இதன் காரணமாக பலர் தற்போது வேட்பாளர்களாக முன்வந்துள்ளார்கள். இது வரவேற்கத் தக்க விடையம்.
எதிர்வருகின்ற 17 ஆம் திகதி அமையவிருக்கின்ற நாடாளுமன்றம் என்பது தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வழங்கக் கூடிய ஒரு சந்தர்ப்பமாக அமையவுள்ளவு. இதற்காகத்தான் எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தல் என நான் கூறுகின்றேன்.
ஜனாதிபதியினை மாற்றுவதற்கு உறுதுணையாக விருந்த எமது தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்றார்களா? என்ற கேள்விக்கு எதிர் வருகின்ற தேர்தலில் விடையளிக்க வேண்டும். அந்த விடை என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கின்ற போதுதான் அரசியல் தீர்வு என்பது சாத்தியப்படும்.
இறுதிவரைக்கும் நாடாளுமன்றில் 14 ஆசனங்களுடன் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இம்முறை 18 தொhடக்கம் 20 ஆசனங்களைப் பெற்றால்தான் ஒரு பலமான பேச்சுவார்த்தையையும், பேரம்போசும் பலமும் எமக்குக் கிடைக்கும். இதனைப் புரிந்து கொண்டு எமது மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.
உரிமை விடையங்களையும். உண்மை விடையங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும்போது என்னை அடிபணிய வைப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால், நான் 5 தடவைகள் குற்றப் புலனாய்வுக்குட்பட்டிருந்தேன். நான் அதை பொருட்படுத்த வில்லை. பின்னர் கடந்த அரசாங்கத்தில் இணையுமாறும் பல கோடி ரூபாய் பணம் தருவதாகவும், என்னுடன் பேரம் பேசப்பட்டது. அந்த உண்மையை நான் வெளியில் தெரிவித்ததன் காரணத்தினால் தற்போது 500 மில்லியன் ரூபாய் கோரி எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான விடையங்களை நான் பொருட்படுத்தப் போவதிவல்லை.
விம்பினால் மக்கள் எனக்கு வாக்கழிக்கலாம் என்னை மக்கள் விரும்பாவிட்டால் கட்சியின் சின்னத்திற்கு அனைவரும் கட்டாயம் வாக்கவிக்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.
1 Comments:
கடவுள் காக்க மட்டடக்களப்பை. இவரின் பேச்சு முழுவதும் தான் எப்படி கஷ்டடப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதுதான். மக்களின் வாழ்க்கைக்கு எப்படி தான் அரசியலில் மூலம் உதவி செய்தார் என்பதோ, அல்லது என் அபிவிருத்தி செய்தார் என்பதோ இல்லை. மக்களுக்கு விளையாட்டு கேடயங்களை கொடுத்து மக்களை இம்முறையும் ஏமாற்ற முடியாது. பிச்சை காரனுக்கு பிச்சை போடுவதுபோல் தேர்தல் காலத்தில் கேவலமான அன்பளிபை தந்து இனிமேல் எம்மை ஏமாற்ற முடியாது.
தோல்வி கண்முன் தெரிந்தால் கட்சிக்கு மட்டும் வாக்கு கேட்பதா? மக்களுக்கு கல்வியை வழங்கி உதவி செய்தால் படித்ததன் பின் சிந்திக்கத்தொடங்கி உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயத்தில் ஆடுகின்ற அரசியல் நாடகம். வைப்போம் அதற்கு முற்றுப்புள்ளி. படிப்பறிவள்ள நாம் இம்முறை அபிவிருத்தியின் நாயகன் கணேசமூர்த்தி ஐயாவைத்தான் வெல்ல வைப்போம். சாதாரண வெற்றி என்று நினைக்காதீர்கள் அமோகவெற்றி. தமிழருக்கு அரசியல் தீர்வு பெற்றுத்தந்தது மட்டக்களப்பின் மைந்தன் என்ற பெருமையை நாம் எடுக்க வேண்டும்.
Post a Comment