21 Jul 2015

மட்டக்களப்பில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 68 சிரார்த்த தின நிகழ்வு

SHARE

மட்டக்களப்பு  விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபை ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் சமாதி தின மலர் அஞ்சலி நிகழ்வு நேற்றுகாலை (19) மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தர் அடிகளாரின்  சமாதியில் இடம்பெற்றது.
சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் சமாதி தின மலர் அஞ்சலி நிகழ்வு  காலை 07.30 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் சமாதியில் மட்டக்களப்பு சிவானந்த தேசிய பாடசாலை அதிபர் கே .மனோராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து அடிகளாரின் உருவ படம் ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டது.இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் சுவாமி பிரபு பிரேமானந்தா இமட்டக்களப்பு வலயக்கல்விப்  பணிப்பாளர் கே .பாஸ்கரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் இகல்வி அணி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் நேற்றுகாலை (19) ஏற்பாடு செய்திருந்த விபுலாந்தனர் ஞாபகார்த்த நிகழ்வு  மட்டக்களப்பு நகரில் நீரூற்றுப்  பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சிலை அருகே நடைபெற்றது.மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் த.யுவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: