அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு தனித்துவமாக களம் இறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்து மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று புதிய வரலாறு படைக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாட்; பதியுதீன் தெரிவித்தார்.
சாய்ந்தமருது சீபிறிஜ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'முஸ்லிம் காங்கிரஸ் இன்றியே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை கடந்த இரு தேர்தல்களில் வெளிப்படையாக உணர்த்தப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில், வன்னியில் என்னைத் தோற்கடிப்பதன் ஊடாகவோ அல்லது மட்டக்களப்பில் அமீர் அலியை தோற்கடிப்பதன் ஊடாகவோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸை அழித்துவிடலாம் என்று கருதுகின்றனர்.
பெருந்தலைவரின் மறைவுக்குப் பின்னர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் இலக்கின்றிப் பயணிக்கின்றது' எனவும் அவர் தெரிவித்தார்.
'எதிர்வரும் பொதுத்தேர்தலானது எமது முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை மிக முக்கியமானதாகும். சமூகத்தை பற்றி சிந்திக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்.
அம்பாறையில் எமது கட்சியின் மக்கள் ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. நாங்கள் இரு ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது. அதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் எமக்கு வழங்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
-
0 Comments:
Post a Comment