இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் திங்கட்கிழமை 27) மரணமடைந்துள்ளார்.
உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சற்றுமுன்னர் காலமாகியுள்ளார்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.இல் திங்கட்கிழமை(27) நடைபெற்ற கருத்தரங்கில் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மயங்கி விழுந்த அப்துல் கலாம், பெத்தானி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
அவரது மரணத்தையடுத்து முழு இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது
0 Comments:
Post a Comment