எம்.எஸ்.எம். சறூக்

விஷேட இப்தார் நோன்பு திறப்பிக்கும் நிகழ்வு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் (கிழக்கு) திருகோணமலை அலுவலகத்தில் செவ்வாக்கிழமை (14)
இடம் பெற்றது.
இந்நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர், உதவி பொது முகாமையாளர், பிராந்திய முகாமையாளர்; (அக்கரைப்பற்று), பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், சிரேஷ்ட மனிதவள உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்த விஷேட இப்தார் நிகழ்வானது இவ்வலுவலகத்தில் கடமையாற்றும் முஸ்லிம் ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் இங்கு இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment