கதிர்காமம் வருடாந்த ஆடி உற்சவம் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாவதை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பாதையாத்திரை செய்த 2134 பக்தர்கள் கதிர்காமத்தை சென்றடைந்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாத யாத்திரையை ஆரம்பித்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, திருக்கோவில், காரைதீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களே கதிர்காமத்தை வந்தடைந்துள்ளனர்.
விழா நிறைவடையும் வரை ஆலய வளாகத்தில் தங்கியிருக்கவுள்ள பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி.குமாரகே வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

0 Comments:
Post a Comment