எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 பிரதான அரசியல் கட்சிகளும் 30 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் அறிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஜனதச பெரமுன, முன்னிலை சோஷலிஸக் கட்சி, ஜனநாயகக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஈரோஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எங்கள் தேசிய முன்னணி உள்ளிட்ட 16 அரசியல் கட்சிகளும் 30 சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் பொருட்டு 365,167 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 368 பேர் போட்டியிடுகின்றனர்.
இக்கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படும் என இக்கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அலிஸாகிர் மௌலானா தலைமையில் திங்கட்கிழமை ஸ்ரீல.மு.கா. கட்சிக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அலிஸாகிர் மௌலானா தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் றகுமான் மற்றும் கணக்காளர் எச்.முஹம்மது றியால், எம். நளீம் மற்றும் தபாலதிபர் ஏ. நஸீர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீல.மு.கா. கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இவர்கள் தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் சார்பில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், எம்.எஸ். சுபைர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஜவாஹிர் சாலி, ஆர். இராசமாணிக்கம் (சாணக்கியன்), மட்டக்களப்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் முதல்வர் ஜோர்ஜ் பிள்ளை ஆகியோர் அடங்கிய குழுவினர் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளர்.
ஐக்கிய தேசியக் கட்சி இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் ஏறாவூர் நகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எல். அப்துல் லத்தீப், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத் தலைவர் எஸ். மாமாங்கராஜா, முன்னாள் பிரதியமைச்சர் கணேஷமூர்த்தி, சட்டத்தரணி ஏ.ஏ.எம். ரூபி, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளர் ஏ.சி. கியாஸ், போதகர் ஜோன், மற்றும் எஸ். ஜெகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மட்டக்களப்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

0 Comments:
Post a Comment