16 Jun 2015

அமுதசுரபி தயிர் உற்பத்தி

SHARE


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்திச் சங்கத்தினால் “அமுதசுரபி” எனும் பெயரில் சுத்தமான எருமைத் தயிர் உற்பத்திய ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.

போரதீவுப்பபற்று பிரதேசத்திலுள்ள நால் நடை வளர்ப்பாளர்களிடமிருந்து எருமைப்பாலைக் கொள்வனவு செய்து சுத்தமான முறையில் தயிர் உற்பத்தி ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தினமும் 100 லீற்றர் எருமைப்பாலில் தயிர் உற்பத்தி செய்யப்படுகின்றது. எதிர் கால்தில் சந்தைவாய்ப்பபைக் கருத்தில் கொண்டு இதனை அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. 

இங்கு உற்பத்தி செய்யப்படும் தயிர் பழுதடையாமல் தொடர்ந்த 5 நாட்கள் இருக்கும்.

ஒரு லீற்றர் எருமைப்பாலில் உற்பத்தி செய்யப்படும் தயிர் சில்லறை விலையாக 180 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மொத்தமாகவும், சில்லறையாகவும், தயிர் தேவைப் படுபவர்கள், இன்றிலிருந்து போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் தும்பங்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள எமது அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்துடன் தொடர்பு கெண்டு தேவையான தயிரைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும்,  போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் கூறினார்.
















SHARE

Author: verified_user

0 Comments: