23 May 2015

திருமலையில் குடியரசு தின நிகழ்வு அனுஷ்டிப்பு

SHARE

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று குடியரசு தின நிகழ்வுகள் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன்  தலைமையில் நடைபெற்றது. 
காலை 8.30 மணிக்கு தேசியக்கொடி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரினால் ஏற்றி வைக்கப்பட்டதுடன் தேசிய கீதமும் பாடப்பட்டது.

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ந போதும் 1972 மே மாதம் 22 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் முலமே இலங்கையர்ளுக்கு சுயாட்சியுடன் கூடிய சுதந்திரம் கிடைத்ததாக இதன்போது திட்டமிடல் பணிப்பளர் குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
SHARE

Author: verified_user

0 Comments: