சமுர்த்தி வீடமைப்பு அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 30 இலட்சம் ரூபா நிதியில் களுவாஞ்சிக்குடி பகுதியில் பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த பஸ்தரிப்பு நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் திகதி மு.ப 9.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி கிராமத்தலைவர் கே.கந்தவேள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, ஆகியோரும் விசேட அதிதிகளாக மாகாண சபை உறுப்பினர்களான கே.கருணாகரம், ஜீ.கிருஷ்ணபிள்ளை, எம்.நடராஜா, மற்றும் பிரதேச செயலாளர்களான எம் .கோபாலரத்தினம், என்.வில்வரத்தினம், ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 Comments:
Post a Comment