அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா தமிழ்ப்பட்டதாரிகள் தமக்கு நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி திருகோணமலையிலமைந்துள்ள கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று (13) மேற்கொண்டனர்.
தாம் இதற்கு முன்னர் கிழக்கு மாகாண சபையால் நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்றபோதும் தமக்கு நியமனங்கள் வழங்ப்படவில்லை என்றும் ஆனால்; தம்மைவிட குறைவான புள்ளிகளை பெற்ற சிங்கள முஸ்லிம் விண்ணப்பதாரிகளுக்கு குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் தாம் புறக்கணிக்கப்பட்டது நியாயமற்றது என்று கோரியும் உண்ணாவரதத்தை மேற்கொள்கின்றனர்.
இதனால் கிழக்கு மாகாண சபைக்கு உள்நுமையும் பிரதான வாயில் உட்பட ஏனைய வாயில்களும் முற்றாக தடைப்பட்டதுடன் மாகாண சபைக்கு உள்வருபவர்கள் மற்றும் வெளியேறுபவர்களும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது.
எனினும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன மற்றும் கிழக்கு முதலமைச்சரின் செயலாளர் மாகாண சபை பிரதிநிதிகள் குறித்த தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் குறித்த பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்வு எதிர்வரும் மாதமளவில் கிடைக்குமெனவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றின் தீர்வுக்கு ஏற்ப நியாயங்கள் வழங்கப்படும் என்றும் வேலையில்லா பட்டதாரிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் தற்போது கிழக்கு மாகாண சபையால் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன் மூலம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்காலத்தில் அரசம மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பை பெற சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தெரவித்தார்
0 Comments:
Post a Comment