14 May 2015

திருமலையில் இடம்பெற்ற மாபெரும் கிரிக்கெட்சுற்றில் கந்தளாய் டயமனட் அணி வெற்றி

SHARE
றொட்டவௌ மற்றும் மஹாதிவுள்வௌ மீனவ சங்கங்களும் றொட்டவௌ சாபி விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய மாபெரும் மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி றொட்டவௌ முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் கடந்த 09, 10, 12 ஆம் திகதிளில் நடைபெற்றது.
25 அணிகள் பங்குபற்றிய இத்தொடரில் இறுதிப்போட்டிக்கு கந்தளாய் டயமன்ட் அணியும் நொச்சியாகம அபுதாபி அணியும் தெரிவாகின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கந்தளாய் டயமன்ட் அணியினர் 09 ஓட்டங்களினால் வெற்றி பெற்றனர்.

முதலாம் இடத்தினை பெற்று வெற்றி பெற்ற அணிக்கு 20, 000 ரூபா பணப்பரிசும் கேடயமும், 2 ஆம் இடத்தை பெற்ற அணிக்கு 12,000 ரூபா பணப்பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது. பிரதேசத்தில் அதிக பணப்பரசில்கள் வழங்கப்பட்ட ஒரு தொடராகவும் இது பதிவாகியது.
SHARE

Author: verified_user

0 Comments: