14 May 2015

கிழக்கு மாகாண சபையின் முதலாவது நடமாடும் சேவை ஆரம்பம்

SHARE

கிழக்கு மாகாண சபையின் வரலாற்றில் முதலாவது நடமாடும் சேவை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தலைமையில் இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் ஆரம்பமானது. 

கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் சிலரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல கட்சிகளின் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வருகை தந்திருந்த பெருமளவிலான பொதுமக்கள் தமது தேவைகளை நடமாடும் சேவையின் போது முன்வைத்தனர். இந்நிகழ்வின் போது விருதுகளும் வழங்கப்பட்டன.
SHARE

Author: verified_user

0 Comments: