28 Mar 2015

சிறைவாசம் அனுபவிக்கும் குறித்த யுவதிக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

SHARE
 கடந்த 14.02.2015 அன்ற  சித்தாண்டி, விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி  தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

சிறைவாசம் அனுபவிக்கும் குறித்த யுவதிக்கு மன்னிப்பு வழங்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த யுவதிக்கு மன்னிப்பு வழங்குதல் தொடர்பாக வியாழக்கிழமை (26) கொழும்பில் வைத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் முக்கிய அமைச்சர்கள் பலருடனும் கலந்தாலோசனை நடத்தினார்.

குறித்த யுவதிக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தேவையான சகல நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறிய முதலமைச்சர் இதன் பின்னர் சீகிரியா மாத்திரமன்றி எங்கு சுற்றுலா சென்றாலும் சட்டஇ விதிமுறைகளை மாணவர்களுக்குஇ அல்லது தம்முடன் அழைத்துச் செல்லும் ஏனையோருக்கு அறிவுரையாக வழங்கி அழைத்து செல்லுதல் கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்முனை மாணவி ஒருவரும் குறித்த சீகிரிய சுவரில் எழுதியதால் கைது செய்யப்பட்டு பலரின் முயற்சிகளுக்கு மத்தியில் விடுதலை செய்யப்பட்டதும் நானறிந்தேன். ஆனால் மீண்டும் கல்முனை பாடசாலை மாணவிக்கு நீதிமன்றத்தால் அழைப்பானை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அது சம்மந்தமாகவும் குறிப்பிட்ட அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்களை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் தெவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: