5 Mar 2015

இலவசக்கல்வியை பலப்படுத்தும் வகையில் செயற்படுவோம் திருமலையில் ஜனாதிபதி

SHARE
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிரமாணிக்கப்பட்ட மாணவர்களிற்கான விடுதி, விளையாட்டு மற்றும் பொழுது போக்கு கட்டிடத் தொகுதி ஆகியன  (03) மாலை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
இக்கட்டிட தொகுதிகள் அமைத்து முடிப்பதற்காக 1200 இலடசம் ரூபாய் அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி அவர்கள் உரையாற்றுகையில் இலவசக்கல்வியை பலப்படுத்தும் வகையில் தமதரசாங்கம் செயற்படும் என்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விரீதியான போட்டி சர்வதேச ரீதியாக அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பானவர்களுள் சிறப்பானவர்களாக முன்னோடிகளுள் முன்னோடிகளாக உருவாக வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் அர்ப்பணிப்பு தியாகம் ஆகியவற்றை உங்கள் வளமான எதிர்காலத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும். வாலிபத்திலே இவை காணப்படல் வேண்டும்.

நீங்கள் சிறப்பானவர்களாக திறமையானவர்களாக உருவாகின்றபோது உங்கள் குடும்பம் மட்டுமல்ல சகல மக்களும் பயனடைவார்கள். அத்துடன் பட்டதாரிகளாக வெளியேறி தொழில் துறைகளில் இணைகின்றபோது நேர்மையுடைவர்களாக செயற்படுவதன் மூலம் பூரணமான மனிதனாக மாற முடியும்.

பல்கலைக்கழக மாணவர்களது பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகங்களது குறைபாடுகளை தீர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் பல அரிய சந்தர்ப்பங்களை கைவிட்டு நாட்டு நலன் கருதியும் உங்கள் நலன் கருதியும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கஷ்டமான சூழலுக்கு மத்தியில் கடமையாற்றுகின்றார்கள்.

இவர்களது சேவையை பெரிதும் மதிக்கின்றேன் என்றும் ஜனாதிபதி இதன் போது தெரிவத்தார். இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கந்து கொண்டார்கள்.
07

06
04
05
SHARE

Author: verified_user

0 Comments: