(பர்விஸ் ரோஸன்)
திருகோணமலைக்கு புத்தளம் மாவட்ட கலாவத்தை தேர்தல் தொகுதியில் இருந்து பருவகால மீன் பிடிக்கு வரும் மீனவர்களின் பாரிய இயந்திரம் படகுகளினால் உள்ளுர் மீனவர்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது இவ்விடயம் தொடர்பாக கடந்த பெப்ரவரி 12 ம் திகதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றும் எவ்வித நடவடிக்கையும் எட்டப்படாத நிலையில் மார்ச் 04 ம் திகதி 12 படகுகளுடன் திருகோணமலைக்கு வந்த கலாவத்தை மீனவர்கள் நிலாவெளி பொலீசாரால் தடுத்து வைக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 04ம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் 27 தமிழ் சிங்கள முஸ்லீம் கடற்றோழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் 300 பேருக்கு மேல் திரண்டு தமது எதிர்பை வெளிப்படுத்திய போது அவ்விடத்திற்கு சென்ற கிழக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் மற்றும் திருகோணமலை நகரசபை உறுப்பினர் கா.கோகுல்ராஜ் ஆகியோர்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மீன் பிடி திணைக்கள உதவி பணிப்பாளர் மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரி ஆகியோருடன் தொடர்வு கொண்டு கலாவத்தை மீனவர்களின் வருகையை தற்காலிகமாக நிறுத்தியதுடன் எதிர்வரும் 10 ம் திகதி செவ்வாய்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மீன் பிடி திணைக்கள உதவி பணிப்பாளர் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் இப்பிரச்சினையில் தொடர்வு பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடனான சந்திப்பு ஒன்றின் மூலம் இதற்கான நிரந்தர தீர்வு எட்டப்படும் என தெரிய வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் பெப்ரவரி 12 ம் திகதி இடம் பெற்ற கவனயீர்ப்பின் பின் இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என நாம் எண்ணி இருந்தோம். ஆனால் அது நியாயமாக இடம் பெறவில்லை.இவ்விடயம் தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றோழில் அமைச்சர் எம் .ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களால் இம் மீனவர்கள் குச்;சவெளி பகுதியில் தொழிலில் ஈடுபட கடிதம் மூலம் அனுமதி வழங்கியுள்ளார்.அமைச்சரின் தன்னிச்சையான இச் செயற்பாடு மக்களிடையே அதிர்ப்தியை ஏற்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் அவர்களும் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர் மீன் பிடி திணைக்கள உதவி பணிப்பாளரும் புத்தளம்; மாவட்டத்தை சேர்ந்தவர் இங்கு வரும் மீனவர்களும் புத்தளம் மாவட்டம் எனவே திருகோணமலை மாவட்ட மீனவர்கள் இவ்விடத்தில் பாதிக்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.என தெரிவித்தார்.
மேலும் கலாவத்தை மீனவர்களை பொருத்த வரையில் தமது பருவகாலத்தில் அவர்கள் தொழில் செய்து முடித்துவிட்டு இரண்டாம் கட்ட பருவகாலத்திற்கு திருகோணமலைக்கு வருகிறார்கள். ஆனால் எமது மீனவர்களோ இந்த ஆண்டுக்கான பருவகாலம மீன் பிடி தற்போதே ஆரம்பித்துள்ளது இதில் உழைப்பதே அவர்களுடைய இந்த ஆண்டு உழைப்பு மேலும் இவர்கள் வேறு எந்த மாவட்டத்திற்கும் சென்று தொழில் செய்வதும் கிடையாது. புத்தளத்திற்கு எமது மீனவர்கள் பருவகால மீன்பிடிக்கு சென்றால் அமைச்சரோ அப்பகுதி மக்களோ அனுமதிப்பார்களா? என கேள்வி எழுப்பியதுடன் திருகோணமலை கடற்றோழிலாளர்களின் இப்பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படும் வரை எமது போராட்டங்கள் பன்மடங்காக அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment