பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சீ.பைசால் காசீம்
ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டில் நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி சமூக
சேவைகள் ஒன்றியத்திற்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நிந்தவூர் ஜேர்மன் நட்புறவுப் பாடசாலையில் இடம்பெற்றது.
நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி சமூக சேவைகள் ஒன்றியத்தின் தலைவர்
ஐ.எல்.எம்.இப்றாகீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க
அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசீம்
ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, விளையாட்டு உபகரணங்களை வழங்கி
வைத்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் ஹசன் அலியின் பிரத்தியேகச் செயலாளர் எம்.ரி.ஜப்பார்
அலி, அம்பாரை மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.கலந்தர், நிந்தவூர்
பிரதேச விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் அனஸ் அஹமட், நிந்தவூர் பிரதேச
விளையாட்டு ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் பைசால்
காசீம் ஆகியோர் நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி, சமூக சேவைகள்
அமைப்பினரால் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தனர்.
0 Comments:
Post a Comment