20 Feb 2015

இலட்சாதிபதியாகப் போகும் குரங்கு

SHARE
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில், தாங்கள் தத்தெடுத்து வளர்க்கும் குரங்குக்கு பல இலட்சம் மதிப்புள்ள சொத்தை எழுதி வைக்க ஒரு தம்பதி முடிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, உயரமான கட்டடம் ஒன்றிலிருந்து குட்டியுடன் குரங்கு ஒன்று தவறி விழுந்தது.

இதில் தாய் குரங்கு இறந்ததால், குட்டியை இந்த குழந்தை இல்லாத தம்பதியினர் தத்தெடுத்து சுமூன் என பெயர் வைத்து, தங்களது குழந்தை போல் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், தங்களுக்கு சொந்தமான 7 இலட்சம் மதிப்புள்ள, பிளாட் மற்றும் வங்கியில் உள்ள பல இலட்சம் மதிப்பிலான பணத்தை குரங்கு பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: