19 Feb 2015

தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்ததன் பிரகாரம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வேதனத்தை அதிகரிக்க கோரிக்கை.

SHARE
புதிய அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்ததன் பிரகாரம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இவ்வாண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் மூவாயிரத்தைந் நூறு ரூபாவினை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஏறாவூர் சமூக சேவை மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.ஜுனைதீன் மற்றும் செயலாளர் அலியார் ஜுனைட் ஆகியோர் ஒப்பமிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு மஹஜர் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…..
புதிய அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு  ரூபா 3500 அதிகரித்து வழங்கப்படுமென அறிவித்திருந்த போதிலும்  தற்போது 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஆயிரம் ரூபா மட்டும் அதிகரித்து வழங்குவதாகக் குறிப்பிட்டிருப்பது, இந்த நாட்டில் வாழுகின்ற சுமார் ஐந்தரை இலட்சம் ஓய்வூதியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் மனவேதனையையும் உருவாக்கியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முழுமையான ஆதரவுகளை வழங்கிய ஓய்வூதியம் பெறுவோருக்கு மனஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய் நாட்டுக்காக சேவைகளை வழங்கிவிட்டு ஒய்வுபெற்ற இவர்கள், வாழ்க்கைச் செலவுச் சுமையாலும். நோயினாலும், அநேகமான குடும்பச் சுமையினாலும் பீடிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வூதியர்களை பொறுத்த வரையில் கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வூதியம் பெறுபவர்களும், 44/96ம் சுற்றுநிருபத்தின் பிரகாரம் ஓய்வுபெற்றவர்களும் முரண்பட்ட  மிகமிக குறைவான கொடுப்பனவையே பெற்றுவருகின்றனர். இதனால் இவ்வாறான முரண்பாடுகள் விரைவாக நீக்கப்பட வேண்டும்.

அத்துடன் 2015ம் ஆண்டு புதிய வரவு-செலவுத் திட்டத்தில் தாங்கள் கூறியதுபோல், இந்த பெப்ரவரி மாதத்திலிருந்து ரூபா 3500ஐ அதிகரித்து வழங்குவதன் மூலம் முரண்பட்ட கொடுப்பனவினால்  மிகவும் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களும் நிவாரணத்தைப்பெற்று மகிழ்ச்சியடைவர்.

எனவே புதிய அரசாங்கம் 2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், தேர்தல் மேடைகளிலும் மற்றும் ஊடகங்களிலும் குறிப்பிட்டபடி 3500ஐ சகல ஓய்வூதியம் பெறுகின்ற சிரேஸ்ட பிரஜைகளுக்கும்  பெப்ரவரி மாதம் தொடக்கம் அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென ஏறாவ+ர் சமூகசேவை மன்றம்; கேட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: