14 Feb 2015

மட்டக்களப்பில் இளம் பெண் ஒருவர் தீக்கிரையாகி பலியாகியுள்ளார்.

SHARE
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று (14) சனிக்கிழமை முற்பகல் மட்டக்களப்பிலுள்ள உள்ளுர் விமான நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையம் மற்றும் அங்கு இடம்பெற்றுள்ள அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிட்டார்.

மேலும் விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள், அதன் அபிவிருத்தி போன்ற விடயங்களை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மட்டக்களப்பு விமானப்படை தலைமையக கட்டளைத்தளபதி கே.கே.ஏ.கே.களுஆராய்ச்சியிடம் கேட்டறிந்து கொண்டார்.

அமைச்சருடன் துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: