மட்டக்களப்பு - காத்தான்குடியையும் பாலமுனையையும் இணைக்கும் கர்பலா
வீதியினை சீரமைத்து தருமாறு கோரி பொதுமக்கள் (13) பிற்பகல்
ஆர்ப்பாட்ட பேரணியொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
ஜும்மாத்தொழுகையின் பின்னர் பாலமுனை ஜாமியுல் ஹசனாத் பள்ளிவாயல் சந்தியில் ஒன்று கூடிய பொதுமக்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக கர்பலா சந்திவரை சென்றனர்.
இதன்போது ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்தோர் பொய்யான வாக்குறுதி வேண்டாம், எமது வீதி சீரமைக்கப்படுமா, பதில் கூறுங்கள், வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியையும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனைப் பிரதேசத்தையும் இணைக்கும் இந்த கர்பலா வீதி பல ஆண்டுகளாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
1990ம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு புனரமைப்புமின்றி சீரற்ற நிலையில் காணப்படும் இவ் வீதியினை சீரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் அங்கு வருகை தந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனிடத்தில் மகஜர் ஒன்றையும் மக்கள் கையளித்தனர்.

0 Comments:
Post a Comment