(ஏ.எல்.எம்.சினாஸ்)
அம்பாறை மாவட்ட அரச உதியோகத்தர்களுக்கு மாணிய அடிப்படையில் வழங்கப்படும் மோட்டார்சைக்கில்களை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்க வேண்டுமென அரச உத்தியோகத்தர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் கூறப்பட்டதற்கு இணங்க அரச உதியோகத்தர்களுக்கு மாணிய அடிப்படையில் மோட்டார்சைக்கில்கள் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அரச உதியோகத்தர்களுக்கு மோட்டார்சைக்கில்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. கிழக்கு மாகாணத்தில்; திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள அரச உதியோகத்தர்களுக்கும் அண்மையில் மோட்டார்சைக்கில்கள் வழங்கப்பட்டன. எனினும் அம்பாறை மாவட்ட வெளிக்கள அரச உதியோகத்தர்களுக்கு இதுவரை மோட்டார்சைக்கில்கள் வழங்கப்படாமையால் இந்த மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்திவருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் திவிநெகும திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமே கடந்த ஆட்சிக்காலத்தில் மோட்டார்சைக்கில்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் நல்லாட்சிக்கு ஆதரவாக ஆகக்கூடிய வாக்குகள் கிடைத்த தேர்தல் தொகுதியான கல்முனை தேர்தல் தொகுதி அம்பாறை மாவட்டத்திலேயே காணப்படுகின்றது. என சுட்டிக்காட்டும் இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவரும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமக்கான மோட்டார்சைக்கில்களை வழங்க துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேண்டுகின்றனர்.
0 Comments:
Post a Comment