சிரியர்கள் லெபனான் நாட்டுக்குள் நுழைவதற்கு கடுமையான சட்டநடவடிக்கைகள் இன்று தொடக்கம் (05) அமுலக்கு கொணடுவரப்பட்டுள்ளது.
சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள்
காரணமாக அரசியல் தஞ்சம் கோரும் சிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன்
காரணமாகவே புதிய சட்டநடவடிக்கைள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.இதற்கு முன்னர்
சிரியர்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி லெபனானுக்குள் செல்ல முடியும்.
எனினும் நாளுக்கு நாள் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் தற்போது
வீஸா நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அகதிகள் நாட்டுக்குள் நுழைவதை தடுப்பதற்கு
லெபனான் அரசு மேற்கொண்டுள்ள புதிய நடைமுறை இதுவாகும். லெபனானில் தற்போது
ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவ்வாறு தஞ்சம் புகுந்துள்ள சிரியர்கள் 1.1 மில்லியன் பேர் அகதிகளாக பதிவு
செய்யப்பட்டுள்ளனர். மேலும் அரை மில்லியன் பேர் இன்னமும் அகதிகளாக
பதியப்படாத நிலையில் அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை
எவ்வித தெளிவின்மை காணப்படுகிறது.
இதற்கு முன்னர் லெபனானுக்கு வரும்
சிரியர்கள் 6 மாதங்களுக்கு எவ்வித தடையின்றி அந்நாட்டில் தங்கியிருக்கலாம்.
தற்போதைய புதிய சட்ட திட்டத்தின் கீழ் லெபனானுக்குள் சிரியர்கள்
உள்நுழைவதற்கான வீஸா வழங்க சில தகமைகளை பெற்றிருத்தல் வேண்டும் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment