27 Jan 2015

மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ளோருக்கு சுயதொழில் கொடுப்பனவு

SHARE
2மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ளோருக்கு சுயதொழில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம்  ஊடாக  சமூக சேவை திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட விதவைகள் , அங்கவீனமுற்றவர்கள், சமூக சேவை திணைக்களத்தினால் மாதாந்தம் வழங்கப்படும் பொதுசன  உதவி தொகை பெறுகின்றவர்கள் மற்றும்  மாதம் 5000 ரூபாவுக்கும் குறைந்த வருமானத்தை பெரும் குடும்பங்களில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர்  வி .தவராசா தலைமையில்  செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.தெரிவு செய்யப்பட 21 பேருக்கான கொடுப்பனவுகள்  இதன்போது வழங்கப்பட்டன.

மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் இவர்கள் பெற்றுக்கொண்ட மானிய தொகையின் ஊடாக எதிர்காலத்தில்  எவ்வாறான சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலக ஊடாக இவர்களின் இல்லங்களுக்கு சென்று பரிசீலனை செய்யப்பட்டு இவர்களுக்கு தேவையான உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
2
3

SHARE

Author: verified_user

0 Comments: