8 Jan 2015

வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

SHARE
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் (04.00 மணி) நிறைவடைந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகியது.

மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 இலட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

நாடுபூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னிணைப்பு

இதன்படி காலை 07.00 மணிமுதல் மாலை 04.00 மணிவரை பதிவான வாக்குகளின் விபரம் வருமாறு:

கண்டி - 75%

மாத்தளை - 75%

காலி - 79%

இரத்தினபுரி - 84%

கேகாலை - 70-75%

நுவரெலியா - 80%

களுத்துறை - 70%

மாத்தறை - 76%

​ பதுளை - 61%

​ அனுராதபுரம் - 76%

​ பொலன்னறுவை - 80%

​ திருகோணமலை - 72%

​ குருநாகல் - 77%

​ புத்தளம் - 71%

​ மட்டக்களப்பு - 60%

​ யாழ்ப்பாணம் - 62%(ad)
SHARE

Author: verified_user

0 Comments: